விவசாய நிலங்களில் சாய்ந்த நிலையில் மின்கம்பங்கள்


விவசாய நிலங்களில் சாய்ந்த நிலையில் மின்கம்பங்கள்
x
தினத்தந்தி 18 Sept 2023 12:15 AM IST (Updated: 18 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விவசாய நிலங்களில் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்

விவசாய நிலங்களில் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆபத்தான மின்கம்பங்கள்

முதுகுளத்தூர் அருகே தேரிருவேலி, மிக்கேல்பட்டினம், மட்டியாரேந்தல், தாழியாரேந்தல், ஆதங்கொத்தங்குடி செங்கற்படை, கருமல் உள்ளிட்ட பல கிராமங்களிலும் விவசாயம் பிரதான தொழிலாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் முதுகுளத்தூர் அருகே தேரிருவேலி கிராமத்தில் விவசாய நிலங்களில் உள்ள பல மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் எந்நேரத்திலும் கீழே விழும் என்ற ஆபத்தான நிலையில் உள்ளது.

பருவமழை சீசன் தொடங்க உள்ள நிலையில் அதற்காக விவசாய நிலங்களில் பருத்தி மற்றும் மிளகாய் விவசாயத்திற்காக விவசாய நிலங்களை விவசாயிகள் உழுது தயார் செய்து வருகின்றனர்.

விவசாயிகள் கோரிக்கை

இதனால் மின்கம்பம் விவசாயிகள் மீது சரிந்து விழுந்து ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பாக தேரிருவேலி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் ஆபத்தான நிலையில் உள்ள இந்த மின்கம்பங்களை உடனடியாக சரி செய்ய சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story