மின் கட்டண உயர்வை கண்டித்து சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வேலைநிறுத்தம்


மின் கட்டண உயர்வை கண்டித்து சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 26 Sept 2023 2:30 AM IST (Updated: 26 Sept 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் மின் கட்டண உயர்வை கண்டித்து சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வேலைநிறுத்தம் செய்ததால் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

தேனி

தமிழகத்தில் மின்கட்டண உயர்வை கண்டித்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி, தேனி தொழிற்பேட்டையில் தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிற்பேட்டையில் 40 தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

அதில், 25 நிறுவனங்கள் நேற்று செயல்படவில்லை. அங்குள்ள எந்திரங்கள் எதுவும் இயக்கப்படவில்லை. அவை தொழிலாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. இந்த வேலைநிறுத்தம் காரணமாக பல்வேறு விதமான பொருட்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. அந்த வகையில், சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான உற்பத்தி பாதிக்கப்பட்டதாக உரிமையாளர்கள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story