போலீஸ் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிபரப்புவதற்கான ஸ்மார்ட் கார்டு
போலீஸ் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிபரப்புவதற்கான ஸ்மார்ட் கார்டு போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் பாச்சல் கிராமத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், வேலூரில் இருந்து திருப்பத்தூரை மாவட்டம் பிரிக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் வாகனங்களை தணிக்கை செய்து, வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்புவதற்கான ஸ்மார்ட் கார்டு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், மாவட்ட காவல்துறை சார்பில் பயன்படுத்தப்படும் நெடுஞ்சாலை ரோந்து வாகனம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வாகனங்களை ஆய்வு மேற்கொண்டு, ஸ்மார்ட் கார்டு வழங்கினார். மேலும் ஆயுதப்படை போலீசாரின் குறைகளை கேட்டு உடனடியாக நிவர்த்தி செய்ய உத்தரவிட்டார். அப்போது ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு விநாயகம், இன்ஸ்பெக்டர் சரண்யா, சப்- இன்ஸ்பெக்டர்கள் கணேசன், முரளிதரன் உள்பட போலீசார் கலந்து கொண்டனர்.