சென்சார் மூலம் இயங்கும் ஸ்மார்ட் ஹெல்மெட் கண்டுபிடிப்பு


சென்சார் மூலம் இயங்கும் ஸ்மார்ட் ஹெல்மெட் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 16 Nov 2022 12:15 AM IST (Updated: 16 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

விபத்தை தடுக்க சென்சார் மூலம் இயங்கும் ஸ்மார்ட் ஹெல்மெட்டை ஓசூர் அரசு பள்ளி மாணவன்கண்டுபிடித்து சாதனை படைத்தான்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் ஒரு தனியார் தொழிற்சாலையில் வெல்டராக பணியாற்றி வருபவர் குமார். இவரது மனைவி வின்னரசி. இவர்களது மகன் ஜீவா (வயது17). இவன், ஜூஜூவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறான். இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் உயிரிழக்கும் சம்பவங்கள், இவனது மனதை பாதித்துள்ளது. இதனால் மாணவன், விபத்துகளில் உயிரிழப்புகளை தவிர்க்க கார் போன்ற 4 சக்கர வாகனங்களில் பயன்படுத்தப்படும் சீட் பெல்ட் தொழில்நுட்பம் போன்று, இரு சக்கர வாகனங்களிலும் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்ற நோக்கில், புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்க தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்தான்.

அதன் விளைவாக, சென்சார்களை கொண்டு இயங்கும், ஹெல்மெட் மற்றும் அதன் தொடர்பான இருசக்கர வாகனங்களில் பொருத்தப்படும் கருவியின் வாயிலாக ஒலி எழுப்புவதுடன், ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற அறிவிப்பு எழுத்து ஒளிரும் விதமாக புதிய கருவி ஒன்றை மாணவன் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளான். இந்த கருவி பொருத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனத்தை ஆன் செய்தவுடன் ஒலி சிக்னலுடன் "ஹெல்மெட் அணிக" என்ற வாசகமும் முதலில் ஒளிரும். உடனே இருசக்கர வாகன ஓட்டியின், காது மற்றும் உச்சந்தலையில் உள்ள நாடிகளை குறிப்பறிந்து சென்சார் மூலம் இயங்கும் விதமாக தயாரிக்கப்பட்ட ஹெல்மெட் அணிந்த உடன் வாகனத்தில் இருந்து எழுப்பப்படும். ஒலி நின்று விடுவதுடன் வாகனமும் ஸ்டார்ட் செய்யப்பட்டு இயக்க தயாராக உள்ள நிலையும் குறிப்பிடப்படும். பின்னர் வாகனத்தை எளிதாக ஹெல்மெட் அணிந்தவாறு இயக்கலாம். இதே போல வாகனம் நின்றவுடன் அறியாமல் ஹெல்மெட்டை கழற்றிவிட்டால் 10 நொடிகள் கழித்து தானாக வாகனம் அனைந்து விடும். இது போன்ற ஒரு பாதுகாப்பான தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து சாதனை படைத்த மாணவனுக்கு பாராட்டுகள் குவிந்தவாறு உள்ளன.


Next Story