3 பள்ளிக்கூடங்களுக்கு ஸ்மார்ட் டி.வி.
3 பள்ளிக்கூடங்களுக்கு ஸ்மார்ட் டி.வி. வழங்கப்பட்டது.
திருநெல்வேலி
இட்டமொழி:
நாங்குநேரி யூனியன் முனைஞ்சிப்பட்டி ஊராட்சியில் உள்ள ரெட்டார்குளம், பிள்ளையார்குளம், முனைஞ்சிப்பட்டி ஆகிய 3 இடங்களிலும் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் மாவட்ட கவுன்சிலர் நிதியில் இருந்து ஸ்மார்ட் டி.வி. வழங்கி நேற்று தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு தலைமை தாங்கினார். முனைஞ்சிப்பட்டி பஞ்சாயத்து தலைவர் பி.இசக்கிதுரை முன்னிலை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணவேணி சின்னதுரை 'ரிப்பன்' வெட்டி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பஞ்சாயத்து துணைத்தலைவர் சி.பேச்சிமுத்து, முன்னாள் துணைத்தலைவர் அய்யப்பன், ஆழ்வாநேரி பஞ்சாயத்து தலைவர் எஸ்.கே.சீனிதாஸ், செயற்குழு உறுப்பினர் மாயகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story