குப்பைகளுக்கு தீ வைப்பதால் புகைமூட்டம்
வேடசந்தூர் பஸ் நிலையம் அருகே குவிந்து கிடக்கும் குப்பையில் மர்மநபர்கள் அடிக்கடி தீ வைத்து கொளுத்துகின்றனர். இதனால் புகைமூட்டம் ஏற்பட்டு, மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
திண்டுக்கல்
வேடசந்தூர் பஸ் நிலையம் அருகே குடகனாறு ஆறு செல்கிறது. இந்த ஆற்றுக்குள் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் குவிந்து கிடக்கும் குப்பையில் மர்மநபர்கள் அடிக்கடி தீ வைத்து கொளுத்துகின்றனர். இதனால் புகைமூட்டம் ஏற்பட்டு, மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் அந்த வழியாக வாகனத்தில் செல்வோரும் தடுமாறி விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே குடகனாற்றில் குப்பைகளை கொட்டி மாசுபடுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Related Tags :
Next Story