புகையில்லா போகிப் பண்டிகை விழிப்புணர்வு பிரசாரம்
புகையில்லா போகிப் பண்டிகை விழிப்புணர்வு பிரசாரத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டையில் புகையில்லா போகிப் பண்டிகை கொண்டாட பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பிரசாரம் நடந்தது. மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், போகிப் பண்டிகை நாளன்று டயர், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் இயற்கைக்கு தீங்கு விளைவிக்கும் செயற்கை பொருள்களை எரிக்காமல் புகையில்லா போகிப் பண்டிகையை கொண்டாட வேண்டும்.
இந்த வாகனம் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்றார். நிகழ்ச்சியில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் ஜெயகிருஷ்ணன் மற்றும் சிப்காட் தொழில்பேட்டையை சேர்ந்த தொழில் நிறுவன அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story