சாராயம் கடத்தி வந்த 4 பேர் தப்பி ஓட்டம்


சாராயம் கடத்தி வந்த 4 பேர் தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 14 Nov 2022 12:30 AM IST (Updated: 14 Nov 2022 12:31 AM IST)
t-max-icont-min-icon

நாகூர் அருகே சாராயம் கடத்தி வந்த 4 பேர் தப்பி ஓடினர். 220 லிட்டர் சாராயம் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாகப்பட்டினம்

நாகூர் அருகே சாராயம் கடத்தி வந்த 4 பேர் தப்பி ஓடினர். 220 லிட்டர் சாராயம் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தப்பி ஓட்டம்

நாகை மாவட்டம் நாகூரை அடுத்த மேலவாஞ்சூர் சோதனை சாவடியில் நேற்று முன்தினம் இரவு நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரைக்காலில் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் வந்தனர். அவர்கள் போலீசாரை கண்டவுடன் சாலையில் மோட்டார் சைக்கிள்களை விட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர்.

இதையடுத்து போலீசார் மோட்டார் சைக்கிள்களுக்கு அருகில் சென்று பார்த்தபோது சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது.

4 பேருக்கு வலைவீச்சு

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த நாகூர் போலீசார் கடத்தி வரப்பட்ட 220 லிட்டர் சாராய மூட்டைகளையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story