சரக்கு வேனில் 2 டன் ரேஷன் அரிசி கடத்தல்; 2 பேர் கைது


சரக்கு வேனில் 2 டன் ரேஷன் அரிசி கடத்தல்; 2 பேர் கைது
x

சரக்கு வேனில் 2 டன் ரேஷன் அரிசி கடத்தல்; 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் அரிமளம் ஒன்றியம் கல்லூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை மறித்து சோதனை செய்தனர். சோதனையில் ரேஷன் அரிசி கடத்தி வந்தது சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரை சேர்ந்த சுப்பு (வயது 40), டிரைவர் சோலைமுத்து (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 2 ஆயிரத்து 400 கிலோ ரேஷன் அரிசியையும், சரக்கு ேவனையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story