சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தல்


சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தல்
x

சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்திய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கடலூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாமதி உத்தரவின்படி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான போலீசார் விருத்தாசலம் அடுத்த வீனங்கேணி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை மறித்து சோதனை செய்தனர். அதில் 23 சாக்கு மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சரக்கு வாகனத்தில் வந்தவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர், விளாங்காட்டூரை சேர்ந்த பெரியநாயகராஜ் (வயது 46) என்பதும், பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, கோழி பண்ணைகளுக்கு அதிக விலைக்கு விற்பதற்காக கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழிலாளி பெரியநாயகராஜை கைது செய்தனர். மேலும் 920 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story