ஆந்திராவுக்கு மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி கடத்தல் - போலீஸ் விசாரணை


ஆந்திராவுக்கு மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி கடத்தல் - போலீஸ் விசாரணை
x
சென்னை

சென்னை மணலி புதுநகர் இன்ஸ்பெக்டர் சிட்டிபாபு தலைமையிலான போலீசார் இன்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி இருந்த ஒரு மினி வேனை மடக்கி சோதனை செய்ததில் 50 கிலோ எடை கொண்ட 70 ரேசன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரிய வந்தது.

விசாரணையில் திருவொற்றியூர், மணலி பகுதிகளில் இலவச ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி ஆந்திராவுக்கு கடத்திச் செல்வது தெரிய வந்தது. இதை பறிமுதல் செய்த மணலி புதுநகர் போலீசார் அம்பத்தூரில் உள்ள குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு போலீசாரை வரவழைத்து கடத்தப்பட இருந்த ரேஷன் அரிசி மற்றும் வேன் டிரைவரை ஒப்படைத்தனர்.

தொடர்ந்து சென்னையிலிருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாகவும், அதை பறிமுதல் செய்வதாகவும் கூறி டிரைவர்களை கைது செய்யும் போலீசார், அதற்கு பின்னணியில் உள்ளவர்களை குறித்து விசாரிக்காமல் இருப்பது ஏன்? என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் எழுப்புகின்றனர்.


Next Story