ஏத்தாப்பூர் பகுதியில் புளிய மரங்கள் வெட்டி கடத்தல்; லாரி பறிமுதல்


ஏத்தாப்பூர் பகுதியில் புளிய மரங்கள் வெட்டி கடத்தல்; லாரி பறிமுதல்
x

ஏத்தாப்பூர் பகுதியில் புளிய மரங்கள் வெட்டி கடத்தி கொண்டு செல்ல தயாராக இருந்த லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சேலம்

பெத்தநாயக்கன்பாளையம்:

ஏத்தாப்பூர் பேரூராட்சி உட்பட்ட பகுதியில் சாலையோரங்களில் ஆயிரக்கணக்கான புளியமரங்கள் உள்ளன. இந்த மரங்கள் நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த நிலையில் சமூக விரோத கும்பல் புளிய மரங்களை வெட்டி, லாரியில் கடத்துவதாக ஏத்தாப்பூர் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சென்றனர். அதிகாரிகளை பார்த்ததும் மரங்களை வெட்டியவர்கள் தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து புளிய மரங்களை வெட்டி கடத்த தயாராக இருந்த லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் மரங்களை வெட்டி கடத்தியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story