வீட்டுக்குள் புகுந்த 3 பாம்புகள்


வீட்டுக்குள் புகுந்த 3 பாம்புகள்
x
தினத்தந்தி 6 May 2023 12:45 AM IST (Updated: 6 May 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

வீட்டுக்குள் 3 பாம்புகள் புகுந்தன.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பேரூராட்சி ராயல் சிட்டி பகுதியில் தலைமை ஆசிரியை ஒருவர் வீட்டில் பின்பக்க ஜன்னல் வழியாக 2 கொம்பேரி மூக்கன் பாம்புகள் புகுந்தன. இதை அறிந்த அவர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் நிலைய அலுவலர் உத்தரவுப்படி வீரர்கள் அங்கு விரைந்து சென்று வீட்டில் பதுங்கி இருந்த பாம்புகளை பிடித்து சென்றனர். இந்த நிலையில் அதே வீட்டில் மற்றொரு பாம்பு இருப்பதாக தீயணைப்பு வீரர்களுக்கு மீண்டும் தகவல் கிடைத்தது. இதையடுத்து தீயணைப்பு விரைந்து அங்கு மீண்டும் சென்று அந்த பாம்பையும் பிடித்தனர். பிடிபட்ட 3 பாம்புகளும் வனப்பகுதியில் விடப்பட்டன. ஒரே வீட்டில் 3 பாம்புகள் பிடிபட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story