தேன்கனிக்கோட்டையில் வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது


தேன்கனிக்கோட்டையில் வீட்டுக்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது
x
தினத்தந்தி 9 Nov 2022 12:15 AM IST (Updated: 9 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை ராஜாஜி தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் ராவ் (வயது 67). ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவர் அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் வசித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று காலை அவர் குடும்பத்துடன் அமர்ந்து டி.வி. பார்த்து கொண்டிருந்தார். அப்போது 6 அடி நீள நாகப்பாம்பு ஒன்று வீட்டுக்குள் புகுந்தது. அந்த பாம்பை பார்த்த பாஸ்கர் ராவ் மற்றும் குடும்பத்தினர் அலறி அடித்து ஓடினர். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு துறையினர் அங்கு சென்று, வீட்டின் சமையல் அறையில் பதுங்கி இருந்த பாம்பை பிடித்தனர். இதையடுத்து அந்த பாம்பு பட்டாளம்மன் ஏரிக்கரை பகுதியில் விடப்பட்டது.


Next Story