நடராஜர் சிலையில் படம் எடுத்து சுற்றியிருந்த 5 அடி நீள பாம்பு
சீர்காழி அருகே நடராஜர் சிலையில் படம் எடுத்து சுற்றி இருந்த 5 அடி நீள பாம்பு பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.
சீர்காழி;
சீர்காழி அருகே நடராஜர் சிலையில் படம் எடுத்து சுற்றி இருந்த 5 அடி நீள பாம்பு பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.
சிலையில் இருந்த பாம்பு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே செங்கமேடு பகுதியில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு வாடகை முறையில் அலங்காரம் செய்யும் கடையின் குடோன் உள்ளது. இந்த குடோனில் நடராஜர் உள்ளிட்ட சாமி சிலைகள் வாடகைக்கு விடுவதற்காக வைக்கப்பட்டுள்ளன. நேற்று இந்த குடோனில் உள்ள நடராஜர் சிலை மீது சுமார் 5 அடி நீள நாகபாம்பு நடராஜரின் உடலை சுற்றிக்கொண்டு இருந்தது. இதைக்கண்டு அச்சம் அடைந்த நிறுவனத்தின் உரிமையாளர் விஜி பாம்பு படிப்பதில் பயிற்சி பெற்ற சீர்காழி பாம்பு பாண்டியனுக்கு தகவல் அளித்தார்.
லாவகமாக பிடித்தார்
இதைத்தொடர்ந்து பாம்பு பாண்டியன் நடராஜர் சிலையினை சுற்றிக்கொண்டு இருந்த பாம்பினை பிடிக்க முயன்றார். அப்போது அந்த பாம்பு நடராஜர் சிலை கழுத்தின் மீது சுற்றி தலை மீது ஏறி படமெடுத்து அச்சுறுத்தியது. இருப்பினும் மிகவும்லாவகமாக நாகப்பாம்பை பாண்டியன் பிடித்து ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.