அம்மாபேட்டையில் தொடர் மழையால் கடும் பனிமூட்டம்
அம்மாபேட்டையில் தொடர் மழையால் கடும் பனிமூட்டம்
ஈரோடு
அம்மாபேட்டை
அம்மாபேட்டை சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள் நிரம்பி வழிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை அவ்வப்போது மழை விட்டுவிட்டு பரவலாக பெய்தது.
தொடர் மழையால் அம்மாபேட்டையில் நேற்று காலை 5 மணி முதல் கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் மேட்டூர்-பவானி செல்லும் மெயின் ரோட்டில் எதிரே வரும் வாகனங்கள் தெரியவில்லை. வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன. வயல்வெளிகளில் பனிமூட்டம் தொிந்தது. இதனால் வயல்வெளிகள் ஒருவித ரம்மியமாக காட்சி அளித்தது. காலை 7 மணிக்கு மேல் மெல்ல மெல்ல பனிமூட்டம் விலகியது.
Related Tags :
Next Story