Normal
பதுக்கி வைத்திருந்த 4,000 லிட்டர் சாராய ஊறல்
கல்வராயன்மலையில் பதுக்கி வைத்திருந்த 4,000 லிட்டர் சாராய ஊறலை போலீசார் தரையில் கொட்டி அழித்தனர்.
கள்ளக்குறிச்சி
கச்சிராயப்பாளையம்,
கல்வராயன்மலையில் மேல்சாத்தனூர் வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக சாராய ஊறலை மர்மநபர்கள் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் கரியாலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள புதருக்குள் பேரல்களில் 4,000 லிட்டர் சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை மர்மநபர்கள் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்த போலீசார் பின்னர் அவற்றை தரையில் கொட்டி அழித்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை பதுக்கி வைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story