சமூக விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்
எட்டயபுரம் பள்ளியில் சமூக விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி
எட்டயபுரம்:
எட்டயபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளியில் போதை விழிப்புணர்வு, சமூக விழிப்புணர்வு சம்பந்தமான ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பழனி குமார் தலைமை தாங்கினார். முதுநிலை ஆசிரியர் கண்ணன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகமது கலந்து கொண்டு பேசினார். அப்போது மாணவ- மாணவிகளிடம் போதையினால் ஏற்படு்ம் பாதிப்பு குறித்து விளக்கினார். நிகழ்ச்சியில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் முருகன், முத்து விஜயன், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story