சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது


சமூக நீதியை நிலைநாட்டுவதில்  தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது
x
தினத்தந்தி 20 Feb 2023 12:15 AM IST (Updated: 20 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்று ஊத்தங்கரையில் நடந்த கூட்டத்தில் தி.க. தலைவர் கி.வீரமணி பேசினார்.

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை

சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்று ஊத்தங்கரையில் நடந்த கூட்டத்தில் தி.க. தலைவர் கி.வீரமணி பேசினார்.

பொதுக்கூட்டம்

ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் திராவிடர் கழகம் சார்பில் சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை பயண பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அரிவரசன் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் பொன்முடி வரவேற்று பேசினார். மண்டல செயலாளர் பிரபு கட்சி கொடி ஏற்றினார். விழாவில் மகளிர் பாசறை மாநில அமைப்பாளர் வக்கீல் மதிவதனி கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் வீரமணி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், சமூக நீதியியை நிலைநாட்டுவதில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றுவதன் மூலம் தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த முடியும் என்று பேசினார். இதில் பேரூராட்சி தலைவர் அமானுல்லா, தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் ரஜினி செல்வம், நகர அவைத்தலைவர் தணிகை குமரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில நிர்வாகி அசோகன், இந்திய குடியரசு கட்சி மாநில பொறுப்பாளர் சிவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட நிர்வாகி சேகர், மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஓசூர்

இதேபோல் ஓசூரில் தி.க. சார்பில் சமூக பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஓசூர் மாவட்ட தலைவர் வனவேந்தன் தலைமை தாங்கினர். இதில் தி.க. தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசினார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோரா மணி, மாநகராட்சி பொது சுகாதாரக்குழு தலைவர் மாதேஸ்வரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில நிர்வாகி கோவேந்தன் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

பின்னர் கீ.வீரமணி கூறுகையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் மிகப்பெரிய திருப்பு முனையாக அமையும். தமிழ்நாட்டில் தங்கள் கட்சி வளர்ந்து விட்டதாக அண்ணாமலை கூறுகிறார். அப்படியெனில் இந்த இடைத்தேர்தலில் தனித்து நின்று போட்டியிட்டிருக்கலாமே?. இடைத்தேர்தலில் தி.மு.க. மிகப்பெரிய வெற்றியடையும். இடைத்தேர்தல் முடிவுக்கு பின்னர் தமிழ்நாட்டில் பல கட்சிகள் காணாமல் போய்விடும் என்று கூறினார்.


Next Story