சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் பரப்புரை பொதுக்கூட்டம்


சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் பரப்புரை பொதுக்கூட்டம்
x

சேத்தூரில் சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் கி.வீரமணி கலந்து கொண்டார்.

விருதுநகர்

ராஜபாளையம்,

சேத்தூரில் சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் கி.வீரமணி கலந்து கொண்டார்.

பொதுக்கூட்டம்

ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூரில் சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் திருப்பதி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் தி.மு.க. தெற்கு மாவட்ட துணை செயலாளர் ராஜா அருண்மொழி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் லிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் சரவணன், ம.தி.மு.க. மாநில நிர்வாகி நவபாரத் நாராயணன், தி.க. மாவட்ட செயலாளர் ஆதவன், நகரத்தலைவர் சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.

திராவிட மாடல் ஆட்சி

பொதுக்கூட்டத்தில் திராவிட கழக தலைவர் கி. வீரமணி கலந்து கொண்டு பேசியதாவது:-

சொன்னதை செய்வோம் செய்வதை சொல்வோம் என்று சொல்லக்கூடிய ஆட்சி திராவிட மாடல் ஆட்சி. மீண்டும் சேது சமுத்திர கால்வாய் திட்டம் தொடங்கப்பட வேண்டும் என்று சொன்னோம். நம்முடைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபை கூடும்போது தீர்மானம் கொண்டு வரப்படும் என்று சொன்னார்.

சேது சமுத்திர கால்வாய் திட்டம் நடத்துவதற்காக தான் இந்த பயணம். சுயமரியாதை என்பது மனிதர்களுக்கு தான் என்பதை அறிவுறுத்தியவர் பெரியார். அறிஞர் அண்ணா திராவிட மாடல் ஆட்சியை உருவாக்கி சுயமரியாதை திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்பதனை உருவாக்கினார்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story