சமூகசேவை சங்க பொன் விழா


சமூகசேவை சங்க பொன் விழா
x

சமூகசேவை சங்க பொன் விழா நடந்தது

தென்காசி

சுரண்டை:

நெல்லை சமூக சேவை சங்கம் சார்பில், மகளிர் சுய உதவி குழுக்களின் 50-வது ஆண்டு பொன் விழா, சுரண்டை தனியார் மகாலில் நடந்தது. புளியங்குடி கத்தோலிக்க சபை தலைவர் அருள்ராஜ் தலைமை தாங்கினார். தென்காசி மறைமாவட்ட தலைவர் போஸ்கோ குணசீலன் முன்னிலை வகித்தார். சமூக சேவை சங்க இயக்குனர் பிரான்சிஸ் சேவியர் வரவேற்று பேசிார்.

தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி போஸ், சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளி முருகன், கீழப்பாவூர் யூனியன் தலைவர் காவேரி சீனித்துரை, சுரண்டை கத்தோலிக்க சபை தலைவர் ஜோசப் ராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். சிறப்பாக பணியாற்றிய குழுக்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மாவட்ட பெண்கள் கூட்டமைப்பு தலைவர் சேசுரத்தினம் நன்றி கூறினார்.


Next Story