தர்மபுரி மாவட்ட பூப்பந்து போட்டியில் அதிகாரப்பட்டி அரசு பள்ளி மாணவிகள் சாதனை
தர்மபுரி மாவட்ட பூப்பந்து போட்டியில் அதிகாரப்பட்டி அரசு பள்ளி மாணவிகள் சாதனை
பாப்பிரெட்டிப்பட்டி:
தர்மபுரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான குழு விளையாட்டு போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் ராஜகோபால் முன்னிலை வகித்தார். மாவட்ட உடற் கல்வி ஆய்வாளர் முத்துக்குமார் வரவேற்றார்.
இதையடுத்து சூப்பர் சீனியர் பிரிவில் நடந்த பூப்பந்து போட்டியில் அதிகாரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தமிழிசை, ரேமாஸ்ரீ, நர்மதா, நந்திதா, சாந்தி, புவனாஸ்ரீ, ரமணியா, ஹர்சினி, அருள்மொழி, கார்த்திகா ஆகியோர் தங்கப்பதக்கமும், சீனியர் பிரிவில் ஸ்ரீமதி, குல்சன்தாஜ், தேவதர்ஷினி, துர்காதேவி, கிருத்திகா, யோகதர்ஷினி, தனுசியா, நித்யஸ்ரீ, கவுசல்யா, பத்மஸ்ரீ ஆகியோர் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.
ஜூனியர் பிரிவில் ஓவியா, கோபிகா, மோனிகா, மகேஷ்வரி, அனுஷ்கா, காயத்ரி, மிதுனா, உதயகீர்த்தி, சாணக்யா, சர்மிலி ஆகியோர் வெண்கலப்பதக்கம் பெற்றனர்.
தங்கப்பதக்கம் வென்ற மாணவிகள் மாநில அளவில் நடைபெற உள்ள பூப்பந்து போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவிகள் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் சக்திவேல், பிரபு அருணாவதி ஆகியோரை தலைமை ஆசிரியர் செல்வம், உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் ஜேம்ஸ் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலக பணியாளர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.