சொக்கநாதன்புத்தூர் மாரியம்மன் கோவில் தேரோட்டம்


சொக்கநாதன்புத்தூர் மாரியம்மன் கோவில் தேரோட்டம்
x

சொக்கநாதன்புத்தூர் மாரியம்மன் கோவில் தேரோட்டம்

விருதுநகர்

ராஜபாளையம்

ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவிலில் புரட்டாசி பொங்கல் தேர் திருவிழாவில் அம்மனுக்கு பால், பன்னீர், தேன், இளநீர் போன்ற 16 வகையான அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்று கடந்த 6-ந் தேதி கொடியேற்றம் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கோவிலில் இரவு குடை சப்பரத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. நேற்று நடைபெற்ற தேர்த் திருவிழாவில் ஏ.கே.ஆர், குரூப் உரிமையாளர்கள் காமராஜ், ராஜ் பிரியம் குடும்பத்தினர் மற்றும் ஊர் நிர்வாகிகள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோவிலில் இருந்து புறப்பட்ட தேரை பொதுமக்கள் ஏராளமாேனார் படம்பிடித்து ஊர் தெரு வழியாக சுற்றி இழுத்து வந்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். விழா ஏற் பாடுகளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story