சோலார் விளக்குகளை திருடிய 2 வாலிபர்கள் கைது
ஒரத்தநாடு பகுதியில் சாலையில் அமைக்கப்பட்டிருந்த சோலார் விளக்குகளை திருடி கடத்தி சென்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
ஒரத்தநாடு;
ஒரத்தநாடு பகுதியில் சாலையில் அமைக்கப்பட்டிருந்த சோலார் விளக்குகளை திருடி கடத்தி சென்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
போலீஸ் சோதனையில் சிக்கினர்
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் சம்பவத்தன்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஈச்சங்கோட்டை அருகே சோலார் விளக்குகளுடன் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இருவரும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள சோலார் விளக்குகளையும், அதன் மின்சாதன பொருட்களையும் திருடி விற்பனை செய்வதற்காக கடத்தி சென்றது தெரிய வந்தது.
2 வாலிபர்கள் கைது
இவர்களில் ஒருவர் அம்மாபேட்டை புளியங்குடி பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் (வயது 24) என்றும், மற்றொருவர் வாழமரக்கோட்டை பகுதியை சேர்ந்த கபிலன் (19) என்றும் தெரிய வந்தது. இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமார், கபிலன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சோலார் விளக்குகள் மற்றும் மின்சாதன பொருட்களையும், ஒரு மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.