போக்சோவில் ராணுவ வீரர் கைது


போக்சோவில் ராணுவ வீரர் கைது
x

போக்சோவில் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது காற்றுக்காக கதவை திறந்து வைத்திருந்தார். இந்தநிலையில் ராணுவ வீரரான ராம்குமார் (வயது 35) தொழிலாளியின் வீட்டிற்குள் புகுந்ததாக கூறப்படுகிறது. அப்போது தொழிலாளியின் 10 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தொழிலாளி அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோவில் வழக்குப்பதிவு செய்து ராம்குமாரை கைது செய்தனர்.


Related Tags :
Next Story