ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை


ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 30 July 2023 1:30 AM IST (Updated: 30 July 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

தேனி அல்லிநகரம் அருகே ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த கொண்டார்.

தேனி

தேனி அல்லிநகரம் அருகே உள்ள அழகாபுரி அம்மாபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 39). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி பிரபா. இவர் ஜெயமங்கலம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். சேகர் பல்பொருள் அங்காடி வைத்து நடத்தி வந்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது.

இதையடுத்து அவர் கோழி இறைச்சி விற்பனை கடை நடத்தி வந்தார். தினமும் காலையில் 5 மணிக்கு டீ குடித்துவிட்டு அவர் கடைக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் சேகர் தூங்கி கொண்டிருந்த அறை வெகுநேரமாகியும் திறக்காமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார்.

அப்போது சேகர் தூக்கில் பிணமாக தொங்கினார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதார். இதுகுறித்து தகவல் அறிந்த அல்லிநகரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story