தூக்குப்போட்டு ராணுவ வீரர் தற்கொலை
சாத்தூர் அருகே தூக்குப்போட்டு ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்டார்.
சாத்தூர்,
சாத்தூர் அருகே தூக்குப்போட்டு ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்டார்.
ராணுவ வீரர்
சாத்தூர் அருகே படந்தாலை சேர்ந்தவர் சுந்தரபாண்டி (வயது 30). ராணுவவீரரான இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் பஞ்சாப்பில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் 15 நாள் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
அப்போது அவர் மது குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது குடும்பத்தினர் கண்டித்ததாக கூறப்படுகிறது.
தூக்குப்போட்டு தற்கொலை
இதனால் மனவேதனை அடைந்த சுந்தரபாண்டி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சாத்தூர் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுந்தரபாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சாத்தூர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.