அரசு மகளிர் பள்ளியில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு
போளூர் அரசு மகளிர் பள்ளியில் மாணவிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்து பேரூராட்சி சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
போளூர்
போளூர் அரசு மகளிர் பள்ளியில் மாணவிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்து பேரூராட்சி சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
திடக்கழிவு மேலாண்மை குறித்து ஒவ்வொரு மாதமும் 3-வது புதன்கிழமைகளில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளாட்சி நறிர்ாகங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி நேற்று போளூர் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. திடக்கழிவு மேலாண்மை மூலம் மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரிப்பது மற்றும் பொதுமக்களிடம் விளக்குவது குறித்து மாணவிகளிடத்தில் போளூர் சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் ராணி சண்முகம் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் 16-வது வார்டு கவுன்சிலர் மல்லிகா கிருஷ்ணமூர்த்தி, பேரூராட்சி செயல் அலுவலர் முகமது ரிஜ்வான், துப்புரவு ஆய்வாளர் ரவிக்குமார், மற்றும், தலைமை ஆசிரியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.