அரசு பள்ளியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்த விழிப்புணர்வு


அரசு பள்ளியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்த விழிப்புணர்வு
x

அரசு பள்ளியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது.

கரூர்

புகழூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியை அனைவரையும் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக புகழூர் நகராட்சித்தலைவர் சேகர் என்கிற குணசேகரன் கலந்து கொண்டு தலைமை தாங்கி பேசுகையில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் நிறுத்த வேண்டும். தேவையற்ற இடங்களில் குப்பைகளை கொட்டக்கூடாது. புகழூர் நகராட்சியை பிளாஸ்டிக் இல்லா மற்றும் பசுமை நிறைந்த நகராட்சியாகவும் மாற்றப்பட்டு வருகிறது. அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். தொடர்ந்து பள்ளியின் வகுப்பறைகளுக்கு தேவையான மின்விசிறிகள் வழங்கப்பட்டன. இதில், நகர்மன்ற துணைத்தலைவர் பிரதாபன், நகர்மன்ற உறுப்பினர் நவநீதகிருஷ்ணன், நகராட்சி நிர்வாக அலுவலர்கள், ஆசிரியர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story