புகையான் பூச்சி தாக்குதலில் இருந்து நெற்பயிரை காப்பாற்றும் வழிமுறைகள்


புகையான் பூச்சி தாக்குதலில் இருந்து நெற்பயிரை காப்பாற்றும் வழிமுறைகள்
x
தினத்தந்தி 26 Dec 2022 12:15 AM IST (Updated: 26 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

புகையான் பூச்சி தாக்குதலில் இருந்து நெற்பயிரை காப்பாற்றும் வழிமுறைகள் குறித்து வேளாண் உதவி இயக்குனர் சுப்பையன் விளக்கம் அளித்துள்ளார்.

மயிலாடுதுறை

புகையான் பூச்சி தாக்குதலில் இருந்து நெற்பயிரை காப்பாற்றும் வழிமுறைகள் குறித்து வேளாண் உதவி இயக்குனர் சுப்பையன் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புகையான் பூச்சி

தற்போது இரவில் வெப்பநிலை குறைவாகவும் மந்தமான சூரிய வெளிச்சம் இருப்பதினால் நெற்பயிரை புகையான் பூச்சிகள் தாக்க வாய்ப்பு உள்ளது.

பூச்சிகள் வேர்களின் அடிப்பாகத்தில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதால் பயிர் மஞ்சள் நிறமாக மாறும். பின்னர் பழுப்பு நிறமாக மாறும். இது தத்துப்பூச்சி எரிப்பு எனப்படும். பாதிக்கப்பட்ட வயல்களில் ஆங்காங்கே வட்ட வட்டமாக புகைந்தது போல காணப்படும். நடவு வயலில் 8 அடிக்கு ஒரு அடி இடைவெளி விட்டு பாத்தி நடவு செய்தல் வேண்டும்.

கட்டுப்பத்தும் முறை

மண் பரிசோதனை பரிந்துரைப்படி தழைச்சத்து இடும்போது 3-4 முறையாக பிரித்து இடவேண்டும். களை செடிகளை அகற்றி விட வேண்டும். புகையான் பூச்சி தாக்குதலுக்கு எதிர்ப்புத் திறன், தாங்கும் திறன் கொண்ட ரகங்களை பயிரிடலாம். விளக்குப் பொறி அமைத்து தாய்ப்பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணித்து அழிக்கலாம்.

மஞ்சள் நிற ஒட்டுப் பொறிகளை எக்டேருக்கு 12 என்ற அளவில் அமைக்கலாம். வயலில் புகையானின் இயற்கை விரோதிகளான சிலந்தி, பச்சை மிரிட் நாவாய்ப்பூச்சி, புள்ளி வண்டு, தட்டான், ஊசித் தட்டான் போன்ற இரை விழுங்கிகளும், அனேக்ரஸ், ஒலிகோசிட்டா போன்ற முட்டை ஒட்டுண்ணிகளும் இப்பூச்சியைப் பெரும் அளவில் கட்டுப்படுத்துகின்றன.

மருந்துகள்

பொருளாதார சேத நிலையை எட்டியவுடன் ஒரு எக்டேருக்கு குளோரன்டிரினிலிப்ரோல் 18.5 எஸ்.சி. 150 மி.லி., அல்லது இமிடாகுளோபிரிட் 17.8 எஸ்.எல்., 100 மி.லி. அல்லது ப்யூப்ரோபெசின் 25 எஸ்.சி. 652 மி.லி., இவைகளில் ஏதாவது ஒன்றை தெளிக்க வேண்டும்.மேலும் புகையானின் மறு உற்பத்தியை பெருக்கும் மீதைல்பாரத்தியான் மற்றும் செயற்கை பைரித்ராய்டு மருந்துகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story