சொத்து தகராறில் தாயை தாக்கியதாக மகன் கைது
சொத்து தகராறில் தாயை தாக்கியதாக மகன் கைது செய்யப்பட்டார்.
அரியலூர்
ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள கீழநெடுவாய் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி எமிலிமேரி(வயது 64). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் இவரது கணவர் பெயரில் உள்ள 8 சென்ட் இடத்தை பெரிய மகனான ஞானசிகாமணிபுஷ்பராஜ், தனக்கு எழுதிக்கொடுக்க வற்புறுத்தி, எமிலிமேரியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் ஞானசிகாமணிபுஷ்பராஜின் மனைவி அற்புதம் மேரி, மகள் ஆகியோர் சேர்ந்து எமிலிமேரி, அவரது இளைய மகன் ஆகியோரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த 2 பேரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து எமிலிமேரி அளித்த புகாரின்பேரில் ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஞானசிகாமணிபுஷ்பராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story