தாயின் சேலையை எரித்த மகன் கைது
பாளையங்கோட்டை அருகே தாயின் சேலையை எரித்த மகனை போலீசார் கைது செய்தனர்.
பாளையங்கோட்டை அருகே உள்ள பாப்பையாபுரத்தை சேர்ந்தவர் செல்வி (வயது 50). இவருடைய மகன் மணி ராஜகோபால் (21). நேற்று முன்தினம் செல்வியிடம் மணி ராஜகோபால் செலவுக்கு பணம் கேட்டு, மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் அவரது சேலைகளை தீயிட்டு எரித்தார். இதுகுறித்து செல்வி சீவலப்பேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மணி ராஜகோபாலை நேற்று கைது செய்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire