தந்தை இறந்த அதிர்ச்சியில் மகனும் சாவு


தந்தை இறந்த அதிர்ச்சியில் மகனும் சாவு
x

ஆரல்வாய்மொழியில் தந்தை இறந்த அதிர்ச்சியில் மகனும் இறந்தார்.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழியில் தந்தை இறந்த அதிர்ச்சியில் மகனும் இறந்தார்.

ஓய்வு பெற்ற ஊழியர்

ஆரல்வாய்மொழி காமராஜர்புதூரை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது82). இவர் இ.எஸ்.ஐ.யில் ஊழியராக பணிபுரிந்து ஒய்வு பெற்றவர். இவருடைய மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். இவருக்கு 4 மகன்களும். ஒரு மகளும் உள்ளனர்.

மூத்தமகன் ராதாகிருஷ்ணன் (57) இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு கடையில் தங்க நகை செய்யும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். ராதாகிருஷ்ணன் தந்தை வீட்டின் அருகிலேயே வசித்து வந்தார்.

அதிர்ச்சியில் மகன் சாவு

ராதாகிருஷ்ணன் உடல்நல குறைவால் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லவில்லை. இவருடைய மனைவி ரேவதி இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் 2.30 மணி அளவில் அய்யப்பன் இறந்தார். அவருடைய அடக்கத்திற்கான ஏற்பாடுகள் நேற்று நடந்த நிலையில், தந்தை இறந்த அதிர்ச்சியில் மதியம் 2.30 மணிக்கு ராதாகிருஷ்ணனும் இறந்தார். இதனால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஒரே குடும்பத்தில் இருவர் இறந்ததால் அந்த வீடு சோகமயமாக காட்சியளித்தது. அதைத்தொடர்ந்து அய்யப்பன் உடல் நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது. ராதாகிருஷ்ணன் உடல் இன்று (புதன்கிழமை) அடக்கம் செய்யப்படுகிறது.

தந்தை இறந்த துக்கம் தாங்காமல் மகன் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story