தாயின் சடலத்தை வீட்டுக்குள் புதைத்த மகன்... தூத்துக்குடியில் அதிர்ச்சி சம்பவம்


தாயின் சடலத்தை வீட்டுக்குள் புதைத்த மகன்... தூத்துக்குடியில் அதிர்ச்சி சம்பவம்
x
தினத்தந்தி 9 May 2024 3:00 PM IST (Updated: 9 May 2024 5:16 PM IST)
t-max-icont-min-icon

தாயின் சடலத்தை வீட்டுக்குள் புதைத்த மகன், 6 நாட்கள் வெளியில் சொல்லாமல் மறைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே அய்யனடைப்பு சிவசக்தி நகரில் உள்ள முகமது குலாம் என்பவரின் வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதைத்தொடர்ந்து சிப்காட் காவல் ஆய்வாளர் மோகன்ராஜ், சம்பவ இடத்திற்கு சென்று முகமது குலாமிடம் விசாரணை நடத்தினார்.

அப்போது கடந்த 2-ம் தேதி தனது தாய் ஆஷா பைரோஸ் இறந்துவிட்டதாகவும், உறவினர்கள் யாரும் இல்லாததால் தானே தாயின் உடலை வீட்டிற்குள் குழி தோண்டி புதைத்து விட்டதாகவும் முகமது குலாம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, புதைக்கப்பட்ட ஆஷா பைரோஸ் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகே அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது இயற்கை மரணம் எய்தினாரா? என்பது தெரியவரும் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது

தாயின் சடலத்தை வீட்டுக்குள் புதைத்த மகன், 6 நாட்கள் வெளியில் சொல்லாமல் மறைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

.


Next Story