சோனியா காந்தி பிறந்தநாள் விழா
புளியங்குடியில் சோனியா காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
தென்காசி
புளியங்குடி:
புளியங்குடியில் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியா காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்படடது. விழாவுக்கு, நகர காங்கிரஸ் தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். நகரசபை கவுன்சிலர் சங்கரநாராயணன் முன்னிலை வகித்தார். மன வளர்ச்சி குன்றியோர் பள்ளிக்கு தேவையான அரிசி, இனிப்பு வழங்கப்பட்டது. இளைஞர் காங்கிரஸ் ஹரிஹரசுதன், நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், நகர செயற்குழு உறுப்பினர் வெள்ளத்துரை, காங்கிரஸ் வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் வழக்கறிஞர் சக்கரவர்த்தி, மாவட்ட காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி, நகர காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகமது ஜவஹர்லால் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story