சொர்ண காளியம்மன் கோவில் ஆடி திருவிழா


சொர்ண காளியம்மன் கோவில் ஆடி திருவிழா
x
தினத்தந்தி 19 July 2023 12:15 AM IST (Updated: 19 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொரவச்சேரி சொர்ண காளியம்மன் கோவில் ஆடி திருவிழா

நாகப்பட்டினம்

சிக்கல்:

நாகை அருகே பொரவச்சேரி சொர்ண காளியம்மன் கோவில் ஆடி திருவிழா கடந்த 14-ந்தேதி பூச்சொரிதல் மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி நேற்றுமுன்தினம் துர்க்கை அம்மன் புறப்பாடு நடந்தது. நேற்று காலை சொர்ண காளியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு படுகளம் செல்லும் நிகழ்ச்சியும், வீதி உலாவும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் வருகிற 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவு அம்மன் வெள்ளை உடுத்தி திருநடனத்துடன் கோவிலுக்குள் செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


Next Story