சோளிங்கர் ெரயில் நிலையத்தில் தென்னக ெரயில்வே பயணிகள் வசதி குழு ஆய்வு
சோளிங்கர் ெரயில் நிலையத்தில் தென்னக ெரயில்வே பயணிகள் வசதி குழு ஆய்வு செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் பகுதியில் அமைந்துள்ள சோளிங்கர் ெரயில் நிலையத்தில் இந்திய ெரயில்வே பயணிகள் வசதி குழு தலைவர் பி.கே.கிருஷ்ணதாஸ் தலைமையில் 10-போ் கொண்ட ெரயில்வே நேற்று குறைபாடுகள் மற்றும் பயனிகளின் தேவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது சென்னையில் இருந்து அரக்கோணம் வரை இயக்கப்படும் மின்சார ரயில்களை சோளிங்கர் ெரயில் நிலையம் வரை இயக்க வேண்டும் எனவும், சோளிங்கர் ெரயில் நிலையத்தில் உள்ள முதல் 3 நடைமேடைகளில் முன்பதிவில்லா பெட்டிகள் நிற்க்கும் பகுதியில் பயணிகளுக்கு நிழற்கூடத்துடன் இருக்கைகள் ஏற்படுத்தி தரவேண்டும் எனவும், வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் படி ஏறி நடைமேடைக்கு செல்ல முடியாத சூழலில் எக்ஸ்கலேட்டா் அல்லது லிப்ட்வசதி ஏற்படுத்தி தரவேண்டும் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் கழிவைறைகளை திறக்க வேண்டும், ஏற்கனவே சோளிங்கர் ெரயில் நிலையத்தில் நின்று சென்ற சென்னை -ஈரோடு, ஈரோடு- சென்னை ஏற்காடு விரைவு ெரயில், சென்னை-புட்டபர்த்தி, புட்டபா்த்தி-சென்னை விரைவு ெரயில்கள், சென்னை- கோவை, கோவை- சென்னை உள்ளிட்ட ெரயில்களுடன் சில சிறப்பு ெரயில்கள் சோளிங்கர் ெரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் எனவும் பெங்களூரு பாசஞ்சா் ெரயிலை மீண்டும் இயக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
இதற்கான மனுக்களை சோளிங்கர் ெரயில் பயணிகள் நல சங்க தலைவர் ரயில்ராதா, இணை செயலாளா்கள் மணி, பொன்குப்பன், பாணாவரம் ஊராட்சி மன்ற தலைவர் அர்ஜூனன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் துரைமஸ்தான், கடம்பத்தூா் ெரயில் பயணிகள் சங்க தலைவர் மூா்த்தி, சித்தேரி பயணிகள் நல சங்க தலைவர் குமார் மற்றும் பாணாவரம் பகுதி பொதுமக்கள் இந்திய ெரயில்வே பயணிகள் வசதி குழு தலைவர் பி.கே.கிருஷ்ணதாசிடம் அளித்தனர். அப்போது கோட்ட ரெயில்வே அதிகாரிகளும் உடனிருந்தனர்.