பனை விதைகள் விதைப்பு
வாய்மேடு ஊராட்சியில் 51 ஆயிரத்து 200 பனை விதைகள் விதைக்கப்பட்டதால் அதிகாரிகள் பாராட்டினர்.
நாகப்பட்டினம்
நாகை மாவட்ட கடலோர ஊராட்சி பகுதிகளில் பனை விதைகள் விதைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்றன. வாய்மேடு ஊராட்சியில் உள்ள பகுதிகளில் வாய்க்கால் கரையோரம், ஆற்றங்கரை பகுதிகள் உள்ளிட்டவைகளில் பனை விதைகள் வாய்மேடு ஊராட்சி மூலம் விதைக்கப்பட்டன. இதில் வேதாரண்யம் தாலுகாவில் உள்ள கடலோர ஊராட்சிகளில் அதிக அளவில் பனை விதைகள் வாய்மேடு ஊராட்சியில் விதைக்கப்பட்டன. கடந்த சில நாட்களில் வாய்மேடு ஊராட்சியில் 51 ஆயிரத்து 200 பனை விதைகள் விதைக்கப்பட்டன.
இதனை வேதாரண்யம் தாசில்தார் ஜெயசீலன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜு, பாஸ்கரன் ஆகியோர் பாராட்டினர். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மலர் மீனாட்சிசுந்தரம், ஊராட்சி செயலாளர் அறிவழகன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மகாலிங்கம் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story