அழகுப் போட்டியில் 'தெறி' பாடலுடன் "ராம்ப் வாக்'' செய்த போலீசார் - அதிரடி காட்டிய எஸ்பி


அழகுப் போட்டியில் தெறி பாடலுடன் ராம்ப் வாக் செய்த போலீசார் - அதிரடி காட்டிய எஸ்பி
x

மயிலாடுதுறை அருகே பாதுகாப்பு பணியின் போது ‘ராம்ப் வாக்’ சென்ற போலீசார் 5 பேரை பணியிட மாற்றம் செய்து எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை செம்பனார்கோவிலில் தனியார் அமைப்பின் சார்பில் அழகு போட்டி நடைபெற்றது. அதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். சினிமா நடிகை யாஷிகா ஆனந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் அழகு போட்டி நடைபெற்றது. ஏராளமானோர் அங்கு வண்ண உடையில் வந்து மேடையில் 'ராம்ப் வாக்' நிகழ்ச்சியில் கழந்து கொண்டனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தெறி பட பாடல் பின்னணியில் கம்பீரமாக ராம்ப் வாக் செய்தனர். இந்நிலையில் போலீசாரின் 'ராம்ப் வாக்' வீடியோ சமூகவலைதளத்தில் வைரல் ஆனது.

இதையறிந்த நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 'ராம்ப் வாக்' செய்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 5 பேரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்க அவர்களுக்கு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்துதல் போன்ற வற்றை ஊக்கப்படுத்த வேண்டும் என பலரும் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Next Story