மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி
அனுப்பர்பாளையம்
திருப்பூர் மாநகராட்சி பிச்சம்பாளையம்புதூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான இணைவோம்-மகிழ்வோம் என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியை லட்சுமிபதி தலைமை தாங்கினார். ஆசிரியை குமாரவடிவு வரவேற்றார். பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவரும், முன்னாள் கவுன்சிலருமான கனகராஜ் கலந்துகொண்டு, மாற்றுத்திறனாளி மாணவர்களின் நலன் குறித்து பேசினார். இதில் திருப்பூர் ஸ்ரீ குமரன் மருத்துவமனை மகப்பேறு மருத்துவர் கலைச்செல்வி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாணவர்களின் ஆரோக்கியமான வாழ்வு, கல்வி மற்றும் எதிர்கால நலன் குறித்து பேசினார். ஆசிரியர் பயிற்றுனர்கள் நாகராஜ், மலர்க்கொடி ஆகியோர் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவம் குறித்து பேசினர். முடிவில் ஆசிரியை மோகனா நன்றி கூறினார். நிகழ்ச்சியையொட்டி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஆசிரியைகள் ராபியத்துல் அதவியா, குமாரவடிவு ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.