பைரவர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்


பைரவர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
x
தினத்தந்தி 11 July 2023 12:15 AM IST (Updated: 11 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தகட்டூர் பைரவர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

நாகப்பட்டினம்

வாய்மேடு:

வாய்மேட்டை அடுத்த தகட்டூரில் பிரசித்தி பெற்ற பைரவர் கோவில் உள்ளது. வடக்கே காசியிலும், தெற்கே தகட்டூரில் மட்டுமே பைரவர் மூலவராக அருள் பாலிக்கிறார். இத்தகைய சிறப்பு மிக்க பைரவர் கோவிலில் மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமியில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆனி மாத தேய்பிறை அஷ்டமியை யொட்டி வைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. முன்னதாக பைரவருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், திருநீறு, திரவியம், தேன் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் வேதாரண்யத்தை அடுத்த மறைஞாயநல்லூர் மேல மறைக்காடர் கோவிலில் காலபைரவருக்கு அஷ்டமி தினத்தை முன்னிட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. இ்தில் பைரவருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், தேன், தயிர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.


Next Story