சிக்கல் சிங்காரவேலருக்கு சிறப்பு அபிஷேகம்


சிக்கல் சிங்காரவேலருக்கு சிறப்பு அபிஷேகம்
x
தினத்தந்தி 6 Oct 2022 12:15 AM IST (Updated: 6 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விஜயதசமியையொட்டி சிக்கல் சிங்காரவேலருக்கு சிறப்பு அபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

நாகப்பட்டினம்

சிக்கல்:

சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் நேற்று விஜயதசமியையொட்டி சிங்காரவேலருக்கு பால், பன்னீர் உள்ளிட்ட 9 வகையான திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிங்காரவேலர் வெண்பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story