நாகூர் தர்காவுக்கு சிறப்பு தொகை
24 ஆண்டுகள் நிலுவையில் இருந்தது: நாகூர் தர்காவுக்கு சிறப்பு தொகை
நாகூர்:
நாகூர் தர்காவுக்கு அரசின் சார்பாக தஸ்திக் அலவன்ஸ் மற்றும் அரசிறைக்கழிவு தொகை என சிறப்பு தொகை ஆண்டு தோறும் வழங்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த 24 ஆண்டுகளாக இந்த தொகை வழங்கப்படாமல் மாவட்ட நிர்வாகத்தால் நிலுவையில் வைக்கப்பட்டது. இதை உடனடியாக வழங்கக்கோரி நாகூர் தர்கா நிர்வாகம் சென்னை ஜகோர்ட்டில் வழக்குப்பதிவு செய்து உரிய உத்தரவு பெற்றது. அதைதொடர்ந்து திருவாரூர் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் உள்ள நாகூர் தர்கா சொத்துக்கான முன்னாள் தஸ்திக் அலவன்ஸ் மற்றும் அரசிறைக்கழிவு நிலுவை தொகை ரூ.3 லட்சத்திற்கான காசோலையை திருவாரூர் மாவட்ட தாசில்தார் நக்கீரன் நேற்று நாகூர் தர்கா தலைமை அறங்காவலர் செய்யது முஹம்மது காஜி உசேன் சாகிப் மற்றும் தர்கா ஆலோசனைக்குழு தலைவர் செய்யது முஹம்மது கலீபா சாகிப் ஆகியோரிடம் வழங்கினார். அப்போது நாகூர் தர்கா பரம்பரை அறங்காவலர்கள், தர்கா அலுவலர்கள் உடனிருந்தனர். நாகை மாவட்ட சொத்துக்களுக்கான தஸ்திக் படி விரைவாக நாகூர் தர்காவுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் அருண்தம்புராஜ் கூறினார்.