விடுபட்டவர்களுக்கான சிறப்பு விண்ணப்ப பதிவு முகாம்


விடுபட்டவர்களுக்கான சிறப்பு விண்ணப்ப பதிவு முகாம்
x

மகளிர் உரிமைத்தொகைக்கு விடுபட்டவர்களுக்கான சிறப்பு விண்ணப்ப பதிவு முகாம் நடைபெற்றது.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 699 ரேஷன் கடைகளில் 4 லட்சத்து 53 ஆயிரத்து 934 குடும்ப அட்டைகள் உள்ளது. முதல்கட்டமாக 418 கடைகளில் 3 லட்சத்து 2 ஆயிரத்து 955 குடும்ப அட்டைகளுக்கு மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டது. அதை பதிவு செய்யும் பணி கடந்த 24-ந் தேதி தொடங்கியது. இப்பணி இன்றுடன் (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது. பதிவு செய்வதற்கு பொதுமக்களுக்கு முன்னதாகவே டோக்கன் வழங்கப்பட்டிருந்தது.

டோக்கனில் குறிப்பிட்ட நாளில் பதிவு செய்ய முடியாமல் விடுபட்டவர்களுக்காக கடைசி 2 நாட்களில் முகாம்களில் பதிவு செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி நேற்று முகாம்களில் பெண்கள் குவிந்து, வரிசையாக நின்று பதிவு செய்தனர். வேலூர் சத்துவாச்சாரி பகுதிகளில் நடந்த முகாமை வேலூர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சத்தியமூர்த்தி ஆய்வு செய்தார்.

2-ம் கட்டமாக விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி 281 கடைகளில் உள்ள 1 லட்சத்து 50 ஆயிரத்து 987 குடும்ப அட்டைகளுக்கு நாளை (சனிக்கிழமை) முதல் 16-ந் தேதிவரை மேற்கொள்ளப்படும். இதற்காக 263 முகாம்கள் ஏற்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story