திண்டிவனத்தில் மத்தியஸ்த மையம் மூலம்நிலுவை வழக்குகளை முடிக்க சிறப்பு ஏற்பாடுஇன்று நடக்கிறது
திண்டிவனத்தில் மத்தியஸ்த மையம் மூலம் நிலுவை வழக்குகளை முடிக்க சிறப்பு முகாம் இன்று நடக்கிறது.
திண்டிவனம்,
தமிழ்நாடு மத்தியஸ்தம் மற்றும் சமரச மையம் தோற்றுவித்த தினத்தை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 9-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் மத்தியஸ்த தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று மத்தியஸ்த தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி விழுப்புரம் மாவட்டத் தில் இன்று முதல் வருகிற 13-ந்தேதி மத்தியஸ்த தினம் கொண்டாடப்படும் என விழுப்புரம் மாவட்ட மத்தியஸ்த மைய ஒருங்கிணைப்பாளரும், விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிபதியுமான பூர்ணிமா தெரிவித்துள்ளார்.
அதன்படி, திண்டிவனத்திலும் இன்று மத்தியஸ்த தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நீதிமன்ற வளாகத்திலேயே பிரசார கூட்டமும், வக்கீல்கள் மூலம் விழிப்புணர்வு நாடகமும் நடத்தப்படுகிறது. திண்டிவனத்தில் செயல்பட்டு வரும் மத்தியஸ்த மையத்தில் தேர்ச்சி பெற்ற மத்தியஸ்தர்கள் மூலம் சமரசம் காண நிலுவையில் உள்ள வழக்குகள் அனுப் பப்படும். இதற்காக எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. பொது மக்கள், வக்கீல்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் வழக்குகளை சுமூகமாக முடித்துக் கொள்ளலாம். இத்தகவலை திண்டிவனம் சமரச சார்பு மையத்தின் தலைவரும், திண்டிவனம் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதியுமான ரகுமான் தெரிவித்துள்ளார்.