குமரி மாவட்ட கோவில்களுக்கு சிறப்பு பஸ் இயக்கம்


குமரி மாவட்ட கோவில்களுக்கு சிறப்பு பஸ் இயக்கம்
x
தினத்தந்தி 28 Nov 2022 12:15 AM IST (Updated: 28 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருவனந்தபுரத்தில் இருந்து குமரி மாவட்ட கோவில்களுக்கு சிறப்பு பஸ் இயக்கப்பட்டது. இதற்கு பக்தர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

கன்னியாகுமரி

திருவட்டார்:

திருவனந்தபுரத்தில் இருந்து குமரி மாவட்ட கோவில்களுக்கு சிறப்பு பஸ் இயக்கப்பட்டது. இதற்கு பக்தர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

கோவில்களுக்கு சிறப்பு பஸ்

கேரள மாநிலம் நெய்யாற்றின்கரையில் அரசு போக்குவரத்து கழக பணிமனை மூலம் 'பட்ஜெட் சுற்றுலா திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய கோவில்களை இணைத்து பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் 'கன்னியாகுமரி யாத்திரை' என பெயரிடப்பட்டு கேரள அரசு பஸ் நேற்று முதல் இயக்கப்பட்டது.

இந்த ஆன்மிக யாத்திரைக்கான பஸ் நேற்று காலையில் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டது. முதலில் திற்பரப்பு மகாதேவர் கோவிலுக்கு பஸ் வந்தது. இதில் 50 பேர் குழுவாக முன்பதிவு செய்து பயணம் செய்தனர்.

அதை தொடர்ந்து குமாரகோவில் மற்றும் வட்டக்கோட்டைக்கு செல்லும் அந்த பஸ் மாலையில் கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவில், பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றது. அங்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அந்த பஸ் மீண்டும் திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டு சென்றது.

ரூ.600 கட்டணம்

இந்த பஸ்சில் ஒரு நபருக்கு ரூ.600 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 50 பேர் குழுக்களாக சேர்ந்து முன்பதிவு செய்யலாம். திருவனந்தபுரம் பகுதியில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் கோவில்களுக்கு வர விரும்புபவர்களுக்கு இந்த பயண திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என பக்தர்கள் தெரிவித்தனர்.


Next Story