வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கம்


வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கம்
x
தினத்தந்தி 6 July 2023 3:28 AM IST (Updated: 6 July 2023 5:23 PM IST)
t-max-icont-min-icon

வாரவிடுமுறையையொட்டி வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது என்று கும்பகோணம் கோட்ட மேலாண்மை இயக்குனர் கூறினார்.

தஞ்சாவூர்

கும்பகோணம்,

வாரவிடுமுறையையொட்டி வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது என்று கும்பகோணம் கோட்ட மேலாண்மை இயக்குனர் கூறினார்.இது குறித்து அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட மேலாண்மை இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சிறப்பு பஸ்கள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில், 8-ந் தேதி (சனிக்கிழமை), 9-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வார விடுமுறை நாட்களையொட்டி பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம்,திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

300 பஸ்கள்

இதைப்போல திருச்சியிலிருந்து கோவை, திருப்பூர்,மதுரை ஆகிய ஊர்களுக்கும், கோவை, திருப்பூர், மதுரை ஆகிய ஊர்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு 100 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

சிறப்பு அலுவலர்கள்

மேலும் விடுமுறைக்கு வந்த பயணிகள் தங்கள் ஊர்களுக்கு திரும்ப செல்ல 9-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 10-ந் தேதி (திங்கட்கிழமை) ஆகிய நாட்களில் சென்னை தடத்தில் 200 சிறப்பு பஸ்களும், மற்ற தடங்களில் 100 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது. முக்கிய பஸ் நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு பஸ் இயக்கத்தை முறைப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவா் கூறியுள்ளார்.


Related Tags :
Next Story