வேலூரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம்
தீபாவளி பண்டிகையையொட்டி வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 200 சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 200 சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை
தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை, வேலூர் போன்ற வெளியூர்களில் வசிப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். அனைவரும் ஒரேநேரத்தில் செல்லும் நிலை ஏற்படும் என்பதால் பலர் போக்குவரத்து வசதி இன்றி அவதிப்படுவார்கள். ரெயில் நிலையம், பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும்.
எனவே பொதுமக்களின் நலனுக்காக வேலூர் மற்றும் பிற பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வேலூரில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் பஸ்கள் கூட்ட நெரிசல் காரணமாக பூந்தமல்லி வரை மட்டும் இயக்கப்படும். மேலும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைக்கவும் காலதாமதத்தை தவிக்கவும் வேலூரில் இருந்தும், பிற பகுதிகளில் இருந்தும் வேலூர் வழியாக சென்னைக்கு வழக்கமாக இ?க்கப்படும் பஸ்கள் மற்றும் சிறப்பு பஸ்கள் அனைத்தும் பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
200 பஸ்கள் இயக்கம்
வேலூரில் இருந்து சென்னைக்கு செல்பவர்கள் பூந்தமல்லியில் இறங்கி வேறு பஸ்களை பிடித்து சென்னையின் பிறபகுதிகளுக்கு செல்ல வேண்டும். இந்த சிறப்பு பஸ்கள் வருகிற 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை இயக்கப்படுகிறது. அதன்படி பூந்தமல்லியில் இருந்து ஆற்காட்டுக்கு 15 பஸ்களும், பூந்தமல்லியில் இந்து திருப்பத்தூருக்கு 30 பஸ்களும், பூந்தமல்லியில் இருந்து குடியாத்தத்துக்கு 20 பஸ்களும், பூந்தமல்லியில் இருந்து வேலூருக்கு 45 பஸ்களும், வேலூரில் இருந்து திருச்சிக்கு 10 பஸ்களும், சென்னையில் இருந்து திருச்சிக்கு 10 பஸ்களும், வேலூரில் இருந்து பெங்களூருக்கு 15 பஸ்களும், வேலூரில் இருந்து ஓசூருக்கு 15 பஸ்களும், பூந்தமல்லியில் இருந்து தருமபுரிக்கு 25 பஸ்களும், பூந்தமல்லியில் இருந்து ஓசூருக்கு 15 பஸ்களும் என 200 பஸ்கள் இயக்கப்படுகிறது. தீபாவளி முடிந்த பின்னரும் தேவைக்கேற்ப பஸ்கள் இயக்கப்படும் என்றும் இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.