சிறப்பு முகாம்
அண்ணா மறுமலர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை ஒன்றியம் செட்டிகுறிச்சி கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட சிறப்பு முகாம் ஊராட்சி மன்ற தலைவர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. திட்ட அலுவலர் வர்கிஸ், ஆர்.டி.ஓ. கல்யாண்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் காஜாமைதீன் பந்தே நவாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மை உழவர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, பொது சுகாதாரத்துறை, சமூக நலத்துறை, கல்வித்துறை, தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட பல துறையை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு அரசால் செயல்படுத்தப்படும் பொதுமக்களுக்கான நலத்திட்டங்கள் குறித்து பேசினர். மேலும் 100 நாள் வேலை திட்ட பணிகள் குறித்து கேட்டறிந்ததோடு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றனர். இந்த முகாமில் பல்வேறு துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.