வாக்குச்சாவடிகளில் வாக்காளர் திருத்த சிறப்பு முகாம்


வாக்குச்சாவடிகளில் வாக்காளர் திருத்த சிறப்பு முகாம்
x

வாக்குச்சாவடிகளில் வாக்காளர் திருத்த சிறப்பு முகாம்

ராமநாதபுரம்

தொண்டி

திருவாடானை தாலுகாவில் சிறப்பு வாக்காளர் திருத்த முகாம் நடைபெற்றது. தாலுகாவில் உள்ள 135 வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற சிறப்பு வாக்காளர் திருத்த முகாமில் வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது. புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது. இம் முகாமில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முகாமை திருவாடானை தாசில்தார் தமிழ்செல்வி மற்றும் துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


Next Story